Posts

Showing posts from 2017

ஒளியிலே தெறிவது-பாகம் 15

ஒளியிலே தெறிவது,பாகம்-15 திருவா எங்களை தாக்க நினைத்தது.ஏன் என்று இருவரும் கேட்பதற்குள் தூரத்தில் இருந்து மின்னல் ஒளிக்கற்றை போன்று நந்தினி எங்களை நோக்கி நடந்து வந்தாள். வேண்டாம் திருவுடன் நிற்கட்டும் துரோகங்கள்.கோதை,அருண்மொழி,திரு மூவரும் நண்பர்களாக இருந்து துரோகியாக மங்கி போயினர். ஆனால் மனது மட்டும் நந்தினியை துரோகியாக இருக்க கூடாது என்று பதைத்து கொண்டிருந்தது.ஏன் நந்தினி மீது இந்த மயக்கம். என் அப்பா ஆதித்யா என்னிடம், பொறுமை கொள்.நந்தினி வாய் திறந்தால் அந்த இரசாயணம் கிடைக்கும்.பேசித் தெறிந்துகொல்வோம் என்றார். நந்தினி எங்கள் முன் வந்து நின்றாள். கண்கள் ஈரத்துடன்,வருத்தம் கலந்த ஒரு புன்னகை,ஆனால் நெஞ்சுருதியுடன் காணப்பட்டாள். நெருப்பும் நீரும் கலந்த கலவையாக நின்றாள். என் தந்தை நந்தினியிடம் "நந்தினி இந்த பிறப்பில் என் மகன் ஆதித்யாவிற்கு உன்னால் எந்த ஆபத்தும் வரக்கூடாது.திருவை விட்டு விடுகின்றோம்.ரகசியம் தெறிந்தால் கூறு.இல்லையென்றால் அனைவரும் கலைந்து சென்று விடலாம் என்று கூறினார். அதற்குள் இமைக்கும் நொடியில் திரு ஒரு கட்டையால் நந்தினியை தலையில் தாக்கினான்.நந்தினி சரிந்...

ஒளியிலே தெறிவது-பாகம் -14

ஒளியிலே தெறிவது,பாகம்-14 Dr.palani .என் தந்தை ,என்னை நோக்கி ,ஆதித்யா சில வினாக்களுக்கு விடை தெறியும்போது கேள்வி மாறிவிடும்.ஆனால் நம் விசயத்தில் விடை தெறியும்போது விடையே கேள்வியாக மாறிவிடும் பரந்து விரிந்த நம் அரச குலத்தின் மக்களின் பேராதரவு மற்றும் அரச குடும்பத்தின் பலரின் சூழ்ச்சியில் ,பிதாமகனாக,எனக்கு உண்மையாக வாழ்ந்தவன் நீ.நன்றாக போய்க்கொண்டிருந்த நம் வாழ்வில் சூறாவளி வெளியில் இருந்து வீசவில்லை.நம் குடும்பத்தில் இருந்தே வீசியது. ஆம் நந்தினியின் மீது ஏழு உலகங்களும் வர்ணிக்க இயலாத காதல் இல்லையில்லை அன்பை கொண்டிருந்தாய் நீ. மரணத்தை வெல்லும் ரசாயனத்தை ஒரு கழத்தில் அணியும் நகையில் அடக்கி என் முன்னோர்கள் எனக்கு கொடுத்ததை உனக்கு பரிசாக வழங்கினேன்.ஆனால் நீ அதை நந்தினிக்கு பரிசாக அளிக்கப்போனாய். காதல் மயக்கம்,கண்கள் ,காதுகள் யார் சொல்லியும் பார்க்காது ,கேட்காது என்பார்கள்.நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் நீ நந்தினிக்கு பரிசளிக்க கிளம்பி சென்றவன்.இறந்துவிட்டாய் என்ற தகவல் ,இல்லையில்லை கொலைச்  செய்யப்பட்டாய் என்ற தகவல்தான் எங்களை வந்தடைந்தது. இந்த ஜென்மத்தில் நீதான் ஆதித்யன் என்ற...

ஒளியிலே தெறிவது-பாகம்-13

ஒளியிலே தெறிவது-13 ஆழ்ந்த சிந்தனையில் அயர்ந்து தூங்கிவிட்டேன். நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தேன்.எங்கே இருக்கும் அந்த நகை ,யோசித்து யோசித்து மன உளைச்சல் அதிகமாயிற்று. அதை போன ஜென்மத்தில் நந்தினியிடம் கொடுக்க வில்லையெனில் எங்கே சென்றிருக்க வேண்டும். அப்போதும் ஜன்னல் ஓரமாக ஒரு ஒருவம் நின்றிருக்க கண்டேன். வேறு கதவின் வழியே அந்த நபரை பின்புறமாக பிடித்துவிட்டேன். முகத்தை பார்த்ததும் ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் உறைந்தேன்.ஆம் அந்த நபர் என்னை ஆரம்பத்தில் என் உயிரை காப்பாற்றிய என் பேராசிரியர் DR.PALANI அவர்கள்.நந்தினியின் தந்தை. சார்!நீங்களா?என்னை பின்னிருந்து நோட்டமிட்டது?ஏன் சார் ஏன்?என வார்த்தைகள் வெடித்தன. அவர் சிரித்துக்கொண்டே இளவரசர் ஆதித்யனுக்கு வணக்கம் என்று கூறியதும்.மனம் பிறழ்ச்சி என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். எனக்கும் நந்தினிக்கு மட்டும் தெறிந்த பூர்வ ஜென்மம் இவருக்கு எப்படி தெறிந்தது?அவரிடமே கேட்டேன். இந்த உலகத்தில் ரகசியம் என்றோ!அதிசயம் என்றோ!நமக்கு மட்டும்தான் தெறியும் என்று எதுவுமில்லை.மனித வாழ்க்கை உணர்வலைகளால் கட்டப்பட்டது.அது ஒருவரிடமிருந்து மனதிற்க்கு...

ஒளியிலே தெறிவது.பாகம் -12

ஒளியிலே தெறிவது,பாகம்-12 காலைப்பொழுது விடிந்தது.எழுந்தவுடன் அவசரமாக கிளம்பி நந்தினி மற்றும் திரு இருவரையும் சந்திக்க கிளம்பினேன். இருவரையும் அரசு அருங்காட்சியகத்திற்கு வந்துவிடுமாறு கூறினேன். அருங்காட்சியகங்கள்-ஒரு காலத்தில் மன்னர்கள் ,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்,சாதாரண மக்கள் அவற்றை பார்க்க கூட அனுமதிக்க முடியாத நிலையில் இருந்த மன்னராட்சி பொருட்கள் ,இன்று மக்களின் பார்வைக்கு முதியவர்களுக்கு -10 ரூபாய்.சிறிவர்களுக்கு -5 ரூபாய் மட்டும்.இதுதான் நிலையாமை தத்துவம். நந்தினி முதலில் வந்திருந்தாள்.நீல நிற புடவை அணிந்திருந்தாள்.எனக்கு மிகவும் பிடித்த நிறம். நீல நிற புடவையும்,அவள் மஞ்சள் நிற தேகமும் என்னை மதி மயங்க வைத்தது. இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். என் பார்வை திருட்டுத்தனமாக அவளை பார்ப்பதை அவள் நேரடியாக கண்டுபிடித்து விட்டதை எண்ணி வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். நந்தினி இரண்டு வாள்களும் கிடைத்து விட்டது.இந்த ரகசியத்தை எப்படி அறிவது என்று கேட்டேன். நந்தினி என்னிடம் இதற்க்கு வரலாற்றில் இருந்து விடையிருக்கு என்றும் .ஆனால் முன் ஜென்மத்தில் மன்னர் ஆதித்யனாக பிறந்த நீ ...

ஒளியிலே தெறிவது,பாகம்-11

ஒளியிலே தெறிவது,பாகம்-11 இரண்டு வாள்களும் கிடைத்து விட்டன.நள்ளிரவு நேரம்.நந்தினியும்,திருவும் உறங்க சென்று விட்டார்கள்.மற்ற மூன்று நண்பர்களும் சிறைக்கு சென்று விட்டனர். தனிமையில் இருக்கும்போது தோன்றும் எண்ணங்கள்,சிந்தனைகள் ஆயிரம் சிந்தனையாளர்களுக்கு தோன்றும் சிந்தனைகளுக்கு இணையானது. . இரண்டு வாள்களையும் எடுத்து பார்த்தேன்.எவ்வளவு அழகாக உள்ளது.இந்த வாள்களின் கூர்மை மெய்சிலிர்க்க வைத்தது. வாள்கள் என்றால் மற்றவர்களை கொல்வதற்க்குதானே பயன்படும்.இந்த இரண்டு வாள்கள் மட்டும் எப்படி மரணத்தை வெல்லும் வாழ்க்கையை அளிக்கும் ?. இரண்டு வாள்களின் ஓரத்தில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.மாணிக்க கற்கள் வாள்களில் இருப்பதை வைத்து பார்க்கும்போது இது போர்களில் பயன்படுத்தபட்டிருக்காது.இரண்டு சகோதரர்களும் தனிப்பட்ட வகையில் இந்த வாளினை பாதுகாத்திருக்க வேண்டும் என்று தெளிவாக விளங்கிற்று. இந்த வாளில் எங்கே அந்த ரகசியம் இருக்கின்றது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது.அதை எவ்வாறு தெறிந்து கொள்வது.? நந்தினியை சந்தித்தால் ஏதேனும் விளக்கம் கிடைக்கும். என்று நினைத்து படுத்து உறங்க நினைத்தேன். அப்போது ஜன்...

ஒளியிலே தெறிவது.பாகம்-10

ஒளியிலே தெறிவது ,பாகம்-10 நண்பர்கள் 3 பேரையும் வெளியே நிற்கவைத்துவிட்டு நந்தினியுடன் அரண்மனைக்குள் நுழைந்தேன். நந்தினி நாம் கண்டறிய போகும் இரண்டாவது வாள் மன்னர் ஆதித்யாவுடையது.வழியை கூறு என்றேன்.அதற்க்கு நந்தினி அந்த ஆதித்யனே நீதான் என்பதை மறந்துவிட்டாய் என்று கூறியவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. வேகமாக ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள்.ஆதித்யா இதுதான் மன்னர் ஆதித்தயனின் அறை .இங்கு தான் ஏதேனும் கிடைக்க வேண்டும் என்று கூறினாள். உடனே நான் இல்லை ஆதித்யன் புதைக்கப்பட்ட இடத்தில்தான் அந்த வாள் இருப்பதாக ஓலைச்சுவடியில் படித்ததாக கூறினேன். எவ்வாறு கண்டுபிடிப்பது ஆதித்யனின் இறந்த இடத்தை என்று கேட்டாள். மன்னர் ஆதித்யனும் ,அவரது காதலி (நந்தினியாகிய நீ) வஞ்சகத்தால் கொல்லப்பட்டதாக நீதான் கூறினாய்.நன்றாக யோசித்துப்பார்  என்றேன். ஆமாம் என்று தலையசைத்தவாறு நந்தினி ஒரு யோசனை சென்னால்.உடல்கள் பல ஜென்மங்கள் பிறந்து அழிந்தாலும்.காதலுணர்வுகள் ஒன்றாகவே இருக்கும். எங்கே அதிகமாக சந்தித்தோம்.என்று கேட்டாள்  எனக்கு தெறிந்து எங்கள் கல்லூரியின் அருகே உள்ள அரசு பூங்காவில் உட்கார்ந்து படித்துக்க...

ஒளியிலே தெறிவது,பாகம்-9

ஒளியிலே தெறிவது, பாகம்-9 காலை 4 மணி இருக்கும்.எழந்து நந்தினியை சந்திக்க அவள் வீட்டிற்க்கு சென்றேன். அவள் எனக்குமுன் என்னை வரவேற்க காத்திருந்தாள்.காலைப்பனிக்கே குளிரூட்டும் பனிக்குவியலாக என் முன் வந்து கிளம்பலாம் என்று கூறினாள் . வேகமாக அவளது காரில் ஏற்றிக்கொண்டு.ஒரு ஒரு மணி நேரத்தில் ஒரு பாழடைந்த அரண்மனையை சென்றடைந்தோம். அரண்மனையில் மேல் சூரியனும் எங்களை வரவேற்று காத்து கொண்டிருந்தான். அரண்மனையில் உள்ளே சென்றோம்.இரண்டு சிம்மாசனம் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிசயத்தில் உறைந்தேன். நந்தினி என்னை பார்த்து இந்த இரண்டு சிம்மாசனம் யாருடையது என்று தெறிகிறதா?என்று கேட்டாள். ம்.மன்னர் வர்மா மற்றும் அவரது தம்பி ஆதித்யா இருவர் உடையது என்று கூறினேன். இதைக் கேட்டவுடன் இடியென சிரித்தாள்.பின் "ஆதித்யா அது நீ புத்தகத்தில் படித்தது" உண்மை அதுவல்ல. வா என்று இன்னொரு அறையை நோக்கி அழைத்து சென்றாள்.அங்கே நிறைய கல்வெட்டுக்கள் எழதப்பட்டு இருந்தது.அதில் அரசை அபகரிக்கும் முயற்சியில் அரசர் வர்மாவும் ,அவரது தங்கை குழலியும் தங்கள் கூட பிறந்த சகோதரன் இளைய வயதிலே மூன்று நாடுகளை படையெடுத்து வெற்...

ஒளியிலே தெறிவது.பாகம்-8

ஒளியிலே தெறிவது.பாகம்-8 நாங்கள் 4 பேரும் நந்தினியிடம் பேச முடிவு செய்தோம்.உடனே நந்தினி வீட்டிற்க்கு கிளம்பினோம். நந்தினியை சந்தித்து விவரங்களை கூறினோம்.நந்தினி என்னை நோக்கி "ஆதித்யாவிற்காக உதவி செய்கிறேன் "என்று சொன்னாள். அனைவரும் சரி என்று முடிவெடுத்து அந்த ஒலைச்சுவடி,நந்தினி புத்தகம் இரண்டையும் எடுத்து பக்கம் பக்கமாக படிக்க ஆரம்பித்தோம். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் தூங்க தயாரானார்கள் நந்தினி மட்டும் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள்.இப்போ நந்தினியிடம் விசயத்தை கேட்டு விடலாம் என்று சென்றேன். வானத்தில் இருக்கும் நிலவுக்கு போட்டியாக பூமியில் பூரண சந்திரனாக நடந்து கொன்டிருந்தாள். நந்தினி என்று அழைத்தேன்.அவள் பதற்றத்துடன் "ஆதித்யா எப்படி இருக்கின்றாய்.மத்தவல்கள்லாம் தூங்கிவிட்டார்களா? என்று கேட்டாள். ம்.எல்லாரும் தூங்கிட்டாங்க.என்னால் வாழ்நாள் முழுதும் தூங்க முடியாமல் செஞ்சிட்டியே?என்று கேட்டேன் அவள் கண்ணில் கண்ணிர் பெருக்கெடுத்தது.காவிரியின் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது. உண்மையை சொல் .எதற்காக என்னை கொலை செய்ய முயற்சித்தாய்?கோதை என்னிடம் அனைத்...

ஒளியிலே தெறிவது.பாகம்-7

ஒளியிலே தெறிவது-7 புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். முதல் பக்கத்தில் வாழ்க்கை அழகானது,வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்-நந்தினி  என்று எழுதி பரிசளித்திருந்தாள். வாழ்ந்துதான் பார்ப்போம் என்று மனதில் சிரித்துக்கொண்டே புத்தகத்தின் தலையங்கத்தை பார்த்தேன். 16 வது தலைப்பாக "இரண்டு சகோதரர்களின் வரலாறு" என்ற தலைப்பு கண்ணை உருத்தியது.அந்த பக்கத்தை எடுத்தேன். முழவதுமாக படித்து முடித்தேன்.என் ஓலைச்சுவடிக்கான பதில் தெறிந்தும் ,தெறியாமலும் புரிந்தது. இரவு மணி 2 ஆகியிருக்கும்.உடனே என் நண்பர்கள் அனைவரையும் அழைத்தேன்.அனைவரும் என் அறைக்கு வந்தவுடன் நாளைக்கே அந்த இரண்டு வாள்களை கண்டுபிடிக்க செல்லலாம் என்று கூறினேன்.அனைவரும் மகிழ்ச்சியடைந்து ஒத்துழைப்பதாக கூறினர். அன்று ,அதற்க்கு அடுத்த நாள் நடந்த நிகழ்வுகள்தான் இன்று நான் இருக்கும் நிலைமைக்கு காரணம்.  ஆதித்யா எழந்திரு என்று கோதை எழுப்பினாள்.தூக்கத்திலிருந்தும், FLASHBACK லும் இருந்து எழந்தேன். கண்விழித்து பார்த்தேன்.கோதை,அருண்மொழி,திரு மூவரும் காரை நிருத்தி எல்லாருக்கும் COFEE வாங்கி பருக ஆரம்பித்தோம்....

ஒளியிலே தெறிவது பாகம்-6

ஒளியிலே தெறிவது-6 அந்த ஓலைச்சுவடியுடன் கல்லூரி திரும்பினோம்.மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.ஓலைச்சுவடியை பிரித்தேன் "மரணமற்ற வாழ்க்கையும் -சகோதரர்களின் வாளும்" அடுத்த பகுதியில் "ஆண்ட அண்ணணும்,மாண்ட தம்பியும் கொண்ட வாள்கள் மரணமற்ற வாழ்க்கையின் இராசயணம் கொண்டது.இரு வாள்களும் மாண்டவன் உடலில் இருக்கிறது." இன்னும் நிறைய பகுதிகளை படித்து முடித்தவுடன் நண்பர்கள் என் அறைக்கு வந்தனர். அவர்களுக்கு இத்தகவலை தெறியபடுத்தினேன். அனைவரும்( 5 பேரும்)மரணமற்ற வாழ்க்கையை தரும் இராசாயண கத்திகளை தேடி கண்டுபிடிக்க முடிவெடுத்தோம். அனைவரும் சென்று விட்டனர்.தமிழ் மன்னர்கள் வரலாற்றில் ,இரண்டு சகோதரர்கள் வாளில் இராசாயனம். உறக்கம் வரவே இல்லை. யார் அந்த மன்னர்கள்?ஏன் இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது?இது உண்மைதானா?கண்டறிய முடியுமா? மரணமற்ற வாழ்க்கையின் இராசயணம் கண்டறிந்தால் உலகம் எவ்வாறு இருக்கும்.சரி கண்டறிவோம். எப்படி இருந்தாலும் இந்த வாய்ப்பு ஏன் என்னிடம்  வந்தது? அப்போது சரி தூங்கலாம் என்று ஆயத்தமானேன்.அப்போது என் புத்தக அலமாரியில் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க எடுத்தேன்...

ஒளியிலே தெறிவது.பாகம்-5

ஒளியிலே தெறிவது-பாகம் 5 வேகமாக சென்ற கார் எங்கே செல்கின்றது என்று தெறியவில்லை.என் நினைவு எங்கள் கல்லூரி காலங்களின் கடைசி வருடத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆம் நாங்கள் 5 பேரும் திருச்சிக்கு  சென்றிருந்தோம்.அங்கு கல்லணைக்கு சென்றோம்.நாங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு கோயில் போன்ற கோபுர அமைப்பை பார்த்தோம். ஆம் மனிதனுக்கு தெரிந்த வாழ்வியல் உண்மைகளை விட தெரியாத விசயங்கள்,  அதன்  சுவாரியசங்கள் மீது உள்ள வெறி அதிகம். அதனருகே சென்று அமர்ந்து ,இதமான காற்றில்,நிழலில் ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருந்தோம். நேரம் ஆனதே தெரியவில்லை.அப்போது அனைவரும் அந்த கோபுரத்தின் உள்ளே சென்று உள்ளே ஒரு சிவலிங்கமும்.,ஆதி விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சிலைகள் பார்த்து வணங்கி  நின்றோம். அனைவரும் வெளியே சென்றார்கள்.அப்போது அங்கே இருந்த ஒரு அம்மன் சிலை ,அதன் ஈர்ப்பு என் மதியை மழுங்கடித்தது.அருகே சென்றேன்.வணங்கி நின்றேன். அப்போது அம்மன் சிலையின் ஒரத்தில்  இருந்து ஒரு நாகப்பாம்பு வெளிப்பட்டது.என்னை பார்த்து அமைதியாக சென்றது.பாம்பிற்க்கு கூட என்னை பிடிக்கவில்லையோ என்று ந...

ஒளியிலே தெறிவது -பாகம் 4

ஒளியிலே தெறிவது-4 கோதையின் நந்தினிக்கு எதிர்ப்பான கடிதத்தையும்,நந்தினியின் பாசமான பேச்சு,எதை நம்புவது?யாரை நம்புவது? மனப்போராட்டத்தில் யாரையாவது சந்தித்தால்தான் ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவமணையில் இருந்து வெளியேற முடிவெடுத்தேன்.மாதவி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றார்.சரியான சமயம். உடைகளை மாற்றிவிட்டு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் கடந்து  வெளியே வரும்போது சூரியன் தன் இளங்கதிர்களால் வரவேற்றது. முதலில் நந்தினியை சந்திக்க சென்றேன்.நந்தினி DR.PALANI அவர்களின் ஒரே மகள்.அவருக்கு தெறியாமல் அவளை சந்திக்க வேண்டும். வீட்டை அடைந்து வீட்டின் அருகே ஒரு மரத்தினடியில் இருந்துகொண்டு நந்தினி பால்கனிக்கு வருவாள் என்று காத்திருந்தேன். ஒரு பெண் தூங்கி எழுந்து வரும்போது அவளின் முகம் எவ்வாறு இருக்கின்றதோ? அதுவே அவளின் உண்மையான அழகு ஆகும்.நந்தினியின் முகம் பாலில் நனைத்த கனியாக வெளிப்பட்டது பால்கனியில். நான் கீழிருந்து சைகை செய்ததை கவனித்து விட்டாள்.இறங்கி வருவதாக கூறி பதட்டத்துடன் இறங்கி வந்தாள். நான் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தேன் அவள் வீட்டு கேட்டை திறக்கும்போது ,என் ப...

ஒளியிலே தெறிவது ,பாகம்-3

ஒளியிலே தெறிவது-3 வெகுநேரம் தூங்கிவிட்டேன்.மணி என்ன என்று தெறியவில்லை.கண் விழித்து பார்த்தபொழுது நர்ஸ் மாதவியும் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போ இரவு நேரம்தான் . சன்னல் வழியாக சந்திரன் என்னை குளிர்ச்சியாக பார்த்துகொண்டிருக்கின்றான். சூரியனிடமிருந்து கடன் வாங்கி ஒளிதந்தாலும் இரவிற்கு தான்தான் முதலாளி என்று வெளிச்சம் கொடுத்து கொண்டிருக்கின்றான். சந்திரன் என்றதுமே நந்தினி சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப காதில் கேட்டுக்கொண்டிருக்கின்றது. ஆம் நான்,நந்தினி,அருண்மொழி,திரு,கோதை ஆகிய 5 பேரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.அனைவருக்கும் பரிச்சயமான கல்லூரி காலங்களே எங்கள் வாழ்விலும் வந்தது.கள்ளம்கபடமற்ற நட்புடன் வாழ்ந்து வந்தோம். இது நட்பு மற்றும் காதலை சொல்லும் கதையுமல்ல அந்த நாள்,அந்த நிமிடம்,அந்த ரகசியம். எங்களிடம் அறிமுகம் ஆகும்வரை நன்றாகத்தான் நாட்கள் ஓடியது. DR.PALANI.MS MCH அவர்கள் அவரது குழவினருடன் வருகின்றார்.ஆம் என்னை அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அழைத்து செல்கின்றனர். மயக்க மருந்து கொடுத்து தலையில் ஏதோ செய்கின்றனர் மயக்கம் தெளிந்து எழுந்தேன்.மூன்று நாட்கள் கடந்திருந்தது.எழந்...

ஒளியிலே தெறிவது-பாகம்2

ஒளியிலே தெறிவது-2 DR.ஆதித்யா நான் பேசறது கேட்கிறதா?என்று என் மருத்துவர் DR.PALANI MS.என்னை கையை கிள்ளி கேட்டார். ஆம் .என் பெயர் க.ஆதித்யாMBBS.நானும் மருத்துவர்தான்.27 வயது நிரம்பிய இளம் மருத்துவர்.கேட்பது என் பேராசிரியர்.பதில் சொல்ல ஆசை .முடியவில்லை.கண்களால் சைகை காண்பித்தேன். ஒரு வருடத்தில் 64 அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்த சாதனையாளர் அவர்.என்னையும் காப்பாற்றிவிட துடித்தார். அவர் மருந்துகள் அதன் அளவுகள் பற்றி என்னை பராமரித்துக்கொள்ளும் செவிலியர் மாதவியிடம் அறிவுரை வழங்கிவிட்டு சென்றுவிட்டார் மாதவி -வயதில் மூத்த,செவிலியர்களால் போற்றப்படும் பெருமைக்குறியவர்.என்னருகே வந்து என்னை பார்த்து கடவுளே எப்படியாவது எங்கள் மருத்துவரை காப்பாற்று என்று வேண்டிக்கொண்டு மருந்துகளை செலுத்தினார். கடவுள்- கடைசி உள்மனது நம்பிக்கை என்று ஒருகணம் நினைத்து கடவுளை நினைத்துக்கொண்டேன். யாரோ எங்கள் அறைக்குள் வருவது போன்ற சத்தம் கேட்கின்றது.மாதவியும் ஒருகணம் எழுந்து யாரன்று பார்க்க ஆவலானார். அந்த முகம் ஆயிரம் கோடி நட்சத்திர பிரகாசத்துடன்,என்னை நோக்கி வருவதை கண்டேன். ஆம் வருவது நந்தினி-என் கல்லூர...

ஒளியிலே தெறிவது=பாகம்-1

பாகம்-1 ஒளியிலே தெறிவது??? படுக்கையில் நான்தான் படுத்திருக்கின்றேன். ஆம். என்னைச்சுற்றி என்னை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெறிய சிறியதுமான கருவிகள் மருந்துகள்,ஊசிகள் நிறைந்த நிசப்தமான அறை உயிர் பிழைக்க முடியாத நிலைக்கு ஆயிரம் காரணங்களை மருத்துவர்கள் ஆராய்கின்றனர்.அறிவித்து விடலாம் என்றும் பேசிக்கொள்கின்றனர் ஹாஹா உடல் உயிர் மூச்சு இல்லை என்று அறிவிக்க ஏன் மனிதன் இவ்வாறு வருத்தப்படுகின்றார்கள் எங்கே யாராவது என்னை  வெளியே யார் யார் பார்க்க வந்திருக்கின்றார்கள்  என்று ஆர்வம் அதிகம்.எப்படி பார்ப்பது.பார்த்து என்ன ஆகப் போகின்றது ம்.இதைப் படிப்பவர்களுக்கு நான் யாரென்று தெறிந்திருக்க வாய்ப்பில்லை என் பெயர்???????                     (ஒளிக்கதிர்கள் அடுத்த பகுதியில் )                      - வெ.த.இராஜன்