ஒளியிலே தெறிவது-பாகம் 15
ஒளியிலே தெறிவது,பாகம்-15
திருவா எங்களை தாக்க நினைத்தது.ஏன் என்று இருவரும் கேட்பதற்குள் தூரத்தில் இருந்து மின்னல் ஒளிக்கற்றை போன்று நந்தினி எங்களை நோக்கி நடந்து வந்தாள்.
வேண்டாம் திருவுடன் நிற்கட்டும் துரோகங்கள்.கோதை,அருண்மொழி,திரு மூவரும் நண்பர்களாக இருந்து துரோகியாக மங்கி போயினர்.
ஆனால் மனது மட்டும் நந்தினியை துரோகியாக இருக்க கூடாது என்று பதைத்து கொண்டிருந்தது.ஏன் நந்தினி மீது இந்த மயக்கம்.
என் அப்பா ஆதித்யா என்னிடம், பொறுமை கொள்.நந்தினி வாய் திறந்தால் அந்த இரசாயணம் கிடைக்கும்.பேசித் தெறிந்துகொல்வோம் என்றார்.
நந்தினி எங்கள் முன் வந்து நின்றாள்.
கண்கள் ஈரத்துடன்,வருத்தம் கலந்த ஒரு புன்னகை,ஆனால் நெஞ்சுருதியுடன் காணப்பட்டாள்.
நெருப்பும் நீரும் கலந்த கலவையாக நின்றாள்.
என் தந்தை நந்தினியிடம் "நந்தினி இந்த பிறப்பில் என் மகன் ஆதித்யாவிற்கு உன்னால் எந்த ஆபத்தும் வரக்கூடாது.திருவை விட்டு விடுகின்றோம்.ரகசியம் தெறிந்தால் கூறு.இல்லையென்றால் அனைவரும் கலைந்து சென்று விடலாம் என்று கூறினார்.
அதற்குள் இமைக்கும் நொடியில் திரு ஒரு கட்டையால் நந்தினியை தலையில் தாக்கினான்.நந்தினி சரிந்து விழந்தாள்.பதைபதைத்து நந்தினியை தாங்கி பிடிக்க ஓடினேன்.என்னையும் தாக்க முயன்றான்.என் தந்தை அவனை அவர் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
நந்தினி -நான் அணுஅணுவாக இரசித்தவள்,உயிரின் கடைசி நேரத்தை பிடித்துக்கொண்டு என் மடியில் ,நந்தினி நீ இரக்ககூடாது என்று தரை மீது என் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தேன்.அவள் சிரித்துக்கோண்டே பயப்படாதே ஆதித்யா இந்த உலகமிருக்கும் வரை எனக்கு இறப்பில்லை என்று கூறி என் நெற்றியில் அவள் அன்பு முத்தத்தை வழங்கினாள்.பின் எழுந்து உட்கார்ந்தவாறே பேசினாள்.
ஆதித்யா அந்த மரணமில்லா இரசாயணம் வேண்டுமா.அதை நான் அருந்திவிட்டேன்.ஏனென்றால் நான் அழியாமல் உயிரோடிருந்தால் உன் இறப்பு நிகழாது.அதை தேடுவோர் உன்னை விட்டு என்னிடம் அந்த வேதியல் தன்மையை அறிய என்னை தேடுவார்கள்.எந்த ஜென்மத்திலும் என்னால் உன் உயிருக்கு ஆபத்து வராது.
Dr.palani sir போன ஜென்மத்தில் நான் ஆதித்யனை கொல்லவில்லை.ஆதித்யன் என்னை சந்திக்க வரும்போது இந்த திரு தான் கொன்றான்.
இந்த ஜென்மத்தில் இவனை (திருவை)பின்தொடர்ந்து ஆதித்யனை காப்பாற்றிவிட்டேன் என்று கூறினாள்.
மூவரும் ஒன்றாக கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டோம்.
தூரத்தில் பெளர்ணமி நிலவு போன்று ஓளிக்கதிர்கள் இரவை தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தது.ஆம் அதில் என் முகம்.ஆனால் இளவரசன் ஆதித்யன் .என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.மூவரும் அங்கிருந்து கிளம்ப தயாரானோம்.இளவரசன் ஆதித்யன் என்னை நொக்கி ஒரு குப்பியை தூக்கி வீசிவிட்டு மறைந்தான்.
அப்போ நந்தினி சாப்பிட்டேன் என்று சொன்னது என்று நந்தினியை நோக்கி பார்த்தேன்.என்னை பார்த்துக்கொண்டே பூமியில் விழந்தாள்.(நந்தினி அந்த மருந்தை அருந்தியும் இறந்தாள் என்ற பெயரை உருவாக்கிவிட்டு இறந்துவிட்டாள்.இனிமேல் அதனை தேடி ஆதித்யனை யாரும் தொல்லைபண்ணவோ,கொலை பண்ணவோ வரமாட்டார்கள்)
ஆனால் மருந்து குப்பியை ஆதித்யனிடம் ,இளவரசன் ஆதித்யனே ஒளியிலே தோன்றி வழங்கிவிட்டு மறைந்தான்.
---------சிறுகதை முடிவுற்றது-----------
படித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

Comments
Post a Comment