ஒளியிலே தெறிவது,பாகம்-9
ஒளியிலே தெறிவது, பாகம்-9
காலை 4 மணி இருக்கும்.எழந்து நந்தினியை சந்திக்க அவள் வீட்டிற்க்கு சென்றேன்.அவள் எனக்குமுன் என்னை வரவேற்க காத்திருந்தாள்.காலைப்பனிக்கே குளிரூட்டும் பனிக்குவியலாக என் முன் வந்து கிளம்பலாம் என்று கூறினாள்.
வேகமாக அவளது காரில் ஏற்றிக்கொண்டு.ஒரு ஒரு மணி நேரத்தில் ஒரு பாழடைந்த அரண்மனையை சென்றடைந்தோம்.
அரண்மனையில் மேல் சூரியனும் எங்களை வரவேற்று காத்து கொண்டிருந்தான்.
அரண்மனையில் உள்ளே சென்றோம்.இரண்டு சிம்மாசனம் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிசயத்தில் உறைந்தேன்.
நந்தினி என்னை பார்த்து இந்த இரண்டு சிம்மாசனம் யாருடையது என்று தெறிகிறதா?என்று கேட்டாள்.
ம்.மன்னர் வர்மா மற்றும் அவரது தம்பி ஆதித்யா இருவர் உடையது என்று கூறினேன்.
இதைக் கேட்டவுடன் இடியென சிரித்தாள்.பின் "ஆதித்யா அது நீ புத்தகத்தில் படித்தது" உண்மை அதுவல்ல.
வா என்று இன்னொரு அறையை நோக்கி அழைத்து சென்றாள்.அங்கே நிறைய கல்வெட்டுக்கள் எழதப்பட்டு இருந்தது.அதில் அரசை அபகரிக்கும் முயற்சியில் அரசர் வர்மாவும் ,அவரது தங்கை குழலியும் தங்கள் கூட பிறந்த சகோதரன் இளைய வயதிலே மூன்று நாடுகளை படையெடுத்து வெற்றி கொண்ட இளவரசர் ,மக்களின் நாயகன் ஆதித்யனை வஞ்சகமாக கொலை செய்தனர்.என்று எழுதியிருந்தது.
நந்தினி என்னை பார்த்து புரிகின்றதா" எப்போதும் வரலாறு உண்மைகளை எழதுவதில்லை .பொய்களை உண்மையாக மாற்ற எழதப்படுகின்றது "என்று கூறினாள்.
சரி நாம் இங்கு அந்த இரண்டு வாள்களை தேடி வந்தபோது என்ன நடந்தது ?என்று கேட்டேன்.
நந்தினி அந்த இரண்டு வாள்களையும் நீதான் கண்டுபிடித்தாய்.இரண்டாவது வாளை எடுக்கும்போது என்று கூறி அமைதியானாள்.பின் ஆதித்தயன் அருகே வந்து கட்டியணைத்தாள்.
அந்த நொடியில் அவளிடம் இருந்த அனைத்து பூர்வ ஜென்ம ஞாபகங்கள்,வாள்களை எடுக்கும்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் அவனிடம் மின்சாரமாக பரிமாற்றம் நிகழ்ந்தது .அவள் அரவணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுற்றியிருந்த புதரை நோக்கி " கோதையும்,அருன்மொழியும்,திருவும் வெளியே வாருங்கள்.என்று கத்தினான்.
மூவரும் ஆதித்யன் அருகே வந்தனர்.ஏன் எங்களை பின்தொடர்ந்தீர்கள்.?எங்கே நான் கண்டுபிடித்த முதல் வாள்?,அதை என்னிடம் கொடுத்தால்தான் இரண்டாவது வாளை கண்டுபிடிக்க முடியும் என்று கூறினான்.
கோதை தன்னிடம் இருந்த அரசர் வர்மாவின் வாளை ஆதித்யனிடம் கொடுத்தாள்.வாளை பெற்றுக்கொண்ட ஆதித்யன் "அனைவரும் இங்கே காத்திருங்கள் நான் நந்தினியுடன் சென்று இரண்டாவது வாளை எடுத்து வருகின்றேன் என்று கூறிவிட்டு நந்தினியுடன் நடந்தான்.
(ஒளிக்கதிர்கள் பாயும்)
வெ.த.இராஜன்.

Comments
Post a Comment