ஒளியிலே தெறிவது-பாகம் -14
ஒளியிலே தெறிவது,பாகம்-14 Dr.palani .என் தந்தை ,என்னை நோக்கி ,ஆதித்யா சில வினாக்களுக்கு விடை தெறியும்போது கேள்வி மாறிவிடும்.ஆனால் நம் விசயத்தில் விடை தெறியும்போது விடையே கேள்வியாக மாறிவிடும் பரந்து விரிந்த நம் அரச குலத்தின் மக்களின் பேராதரவு மற்றும் அரச குடும்பத்தின் பலரின் சூழ்ச்சியில் ,பிதாமகனாக,எனக்கு உண்மையாக வாழ்ந்தவன் நீ.நன்றாக போய்க்கொண்டிருந்த நம் வாழ்வில் சூறாவளி வெளியில் இருந்து வீசவில்லை.நம் குடும்பத்தில் இருந்தே வீசியது. ஆம் நந்தினியின் மீது ஏழு உலகங்களும் வர்ணிக்க இயலாத காதல் இல்லையில்லை அன்பை கொண்டிருந்தாய் நீ. மரணத்தை வெல்லும் ரசாயனத்தை ஒரு கழத்தில் அணியும் நகையில் அடக்கி என் முன்னோர்கள் எனக்கு கொடுத்ததை உனக்கு பரிசாக வழங்கினேன்.ஆனால் நீ அதை நந்தினிக்கு பரிசாக அளிக்கப்போனாய். காதல் மயக்கம்,கண்கள் ,காதுகள் யார் சொல்லியும் பார்க்காது ,கேட்காது என்பார்கள்.நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் நீ நந்தினிக்கு பரிசளிக்க கிளம்பி சென்றவன்.இறந்துவிட்டாய் என்ற தகவல் ,இல்லையில்லை கொலைச் செய்யப்பட்டாய் என்ற தகவல்தான் எங்களை வந்தடைந்தது. இந்த ஜென்மத்தில் நீதான் ஆதித்யன் என்ற...