ஒளியிலே தெறிவது-பாகம் -14

ஒளியிலே தெறிவது,பாகம்-14
Dr.palani .என் தந்தை ,என்னை நோக்கி ,ஆதித்யா சில வினாக்களுக்கு விடை தெறியும்போது கேள்வி மாறிவிடும்.ஆனால் நம் விசயத்தில் விடை தெறியும்போது விடையே கேள்வியாக மாறிவிடும்
பரந்து விரிந்த நம் அரச குலத்தின் மக்களின் பேராதரவு மற்றும் அரச குடும்பத்தின் பலரின் சூழ்ச்சியில் ,பிதாமகனாக,எனக்கு உண்மையாக வாழ்ந்தவன் நீ.நன்றாக போய்க்கொண்டிருந்த நம் வாழ்வில் சூறாவளி வெளியில் இருந்து வீசவில்லை.நம் குடும்பத்தில் இருந்தே வீசியது.

ஆம் நந்தினியின் மீது ஏழு உலகங்களும் வர்ணிக்க இயலாத காதல் இல்லையில்லை அன்பை கொண்டிருந்தாய் நீ.

மரணத்தை வெல்லும் ரசாயனத்தை ஒரு கழத்தில் அணியும் நகையில் அடக்கி என் முன்னோர்கள் எனக்கு கொடுத்ததை உனக்கு பரிசாக வழங்கினேன்.ஆனால் நீ அதை நந்தினிக்கு பரிசாக அளிக்கப்போனாய்.

காதல் மயக்கம்,கண்கள் ,காதுகள் யார் சொல்லியும் பார்க்காது ,கேட்காது என்பார்கள்.நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் நீ நந்தினிக்கு பரிசளிக்க கிளம்பி சென்றவன்.இறந்துவிட்டாய் என்ற தகவல் ,இல்லையில்லை கொலைச்  செய்யப்பட்டாய் என்ற தகவல்தான் எங்களை வந்தடைந்தது.

இந்த ஜென்மத்தில் நீதான் ஆதித்யன் என்று நீ பிறக்கும்போதே எனக்கு தெறியும்.எனக்கு பிறந்தவன்தான் நீ.என் நண்பரிடம் கொடுத்து வளர்க்க சொன்னேன்.பூர்வ ஜென்மம் தெறிந்து யாராவது நம்மை மாதிரி பிறந்து வந்தால் ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக.நந்தினி இளம் வயதிலே அனாதை இல்லத்தில் அடையாளம் கண்டு என் வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தேன்.

இப்போது நீங்கள் இருவரும் இந்த நிலையில் சந்தித்திருக்கின்றீர்கள்.

அப்பா என்று ஓடி ஆரத்தழுவி ,கண்ணிர் மல்க அப்பா என் தெய்வம் என்று வெடித்து குமறினான் ஆதித்யன்.அவரும்தான்.

அப்பா அப்படியென்றால் அந்த ரசாயனப்பொடி கொண்ட நகை யாரிடம்தான் உள்ளது என்று கேட்டான்.

அதற்காகத்தான் நானும் காத்திருக்கின்றேன்.என்று DR.PALANI கூறிய அக்கணம் எங்கோ இருந்து ஒரு மரக்கட்டை இருவரையும் நோக்கி வருவதை ஆதித்யன் பார்த்து,தன் தந்தையுடன் கீழே விழுந்து தப்பினார்கள்.

கட்டையை எறிந்தவனை பிடிக்க இருவரும் வேகமாக பாய்ந்து பிடித்தார்கள்.

முகத்தை பார்த்தார்கள்.அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனார்கள்.

ஆம் அந்த முகம்  திரு தான்.ஆதித்யனுக்கும் ,நந்தினிக்கும் எஞ்சியிருந்த ஒரே நண்பன்.அவனும் இப்போது துரோகியாக DR.PALANI மற்றும் ஆதித்யன் முன் நின்றான்.



(ஒளிக்கதிர்கள் பாயும்.அடுத்த பாகத்தில் சிறுகதை நிறைவடையும்)

வெ.த.இராஜன்.

Comments

Popular posts from this blog

ஒளியிலே தெறிவது ,பாகம்-3

ஒளியிலே தெறிவது,பாகம்-9

ஒளியிலே தெறிவது=பாகம்-1