ஒளியிலே தெறிவது.பாகம்-8

ஒளியிலே தெறிவது.பாகம்-8
நாங்கள் 4 பேரும் நந்தினியிடம் பேச முடிவு செய்தோம்.உடனே நந்தினி வீட்டிற்க்கு கிளம்பினோம்.

நந்தினியை சந்தித்து விவரங்களை கூறினோம்.நந்தினி என்னை நோக்கி "ஆதித்யாவிற்காக உதவி செய்கிறேன் "என்று சொன்னாள்.
அனைவரும் சரி என்று முடிவெடுத்து அந்த ஒலைச்சுவடி,நந்தினி புத்தகம் இரண்டையும் எடுத்து பக்கம் பக்கமாக படிக்க ஆரம்பித்தோம்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் தூங்க தயாரானார்கள்

நந்தினி மட்டும் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள்.இப்போ நந்தினியிடம் விசயத்தை கேட்டு விடலாம் என்று சென்றேன்.
வானத்தில் இருக்கும் நிலவுக்கு போட்டியாக பூமியில் பூரண சந்திரனாக நடந்து கொன்டிருந்தாள்.
நந்தினி என்று அழைத்தேன்.அவள் பதற்றத்துடன் "ஆதித்யா எப்படி இருக்கின்றாய்.மத்தவல்கள்லாம் தூங்கிவிட்டார்களா? என்று கேட்டாள்.

ம்.எல்லாரும் தூங்கிட்டாங்க.என்னால் வாழ்நாள் முழுதும் தூங்க முடியாமல் செஞ்சிட்டியே?என்று கேட்டேன்

அவள் கண்ணில் கண்ணிர் பெருக்கெடுத்தது.காவிரியின் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது.

உண்மையை சொல் .எதற்காக என்னை கொலை செய்ய முயற்சித்தாய்?கோதை என்னிடம் அனைத்தையும் கூறிவிட்டாள் என்று கூறினேன்.

அவள் என்பக்கம் திரும்பி என்னருகே வந்து என்னை பார்த்து கோதை சொல்வது இருக்கட்டும் .நீ என்ன நினைக்கின்றாய்?நான் உன்னை கொலைச்செய்ய முயற்சி செய்தேன் என்பதை நம்புகிறாயா?என்று கேட்டாள்.
அவள் கண்கள் பொய் சொல்லவில்லை.நேரடியாக பதில் சொல் என்றேன்.
அவள் என் கையை பற்றி ஒரு முத்தம் கொடுத்தாள்
7 ஜென்மங்களும் ஒரே நிமிடத்தில் வாழ்ந்த உணர்வு.
யார் என்ன சொன்னாலும் நம்பாதே ஆதித்யா.அந்த 4 சதிகாரர்களிடம் கவனமாக இரு.

பொன ஜென்மத்தில் பேரரசன்  ஆதித்யாவாகிய உன்னையும்.நீ உயிரே வைத்திருந்த நந்தினிநாச்சியாராகிய என்னையும் கொன்றவர்கள் அந்த கோதையும்,அருண்மொழியும்,திரு 3 பேரும்.என்று கூறினாள்.

உலகமே இரண்டாக பிளவுபட்டது போல் உணர்ந்தேன்.
ஒரிடத்திற்க்கு சென்றால் இதை நீயும் உணர்வாய் ஆதித்தயா என்று கூறினாள்.விடியற்காலை 4 மணியளவில் தயாராக இருக்கும்படியும் கூறினாள்.

சரி என்று கூறினேன்.அவள் கைகளை பற்றிக்கொண்டே.

இங்கே என்ன தனியாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்,?தூங்கலையா?என்று கேட்டுக்கொண்டே கோதை எங்களை நோக்கி வந்தாள்.

வேகமாக எங்கள் கைகளை விடுவித்து.கண்களை சரிசெய்து கொண்டு .தூக்கம் வரவில்லை .அதான் மாடிக்கு வந்தேன் என்று கூறி தூங்க செல்வதாக கூறினேன்.

கோதை எங்கள் இருவரையும் பார்த்து முறைத்தாள்.நானும்  நந்தினியும் உலகத்தையே வென்றுவிட்ட மனநிலையில் இருவரும் மனதளவில் மகிழ்ச்சியுடன் கீழிறங்கி அறைகளுக்கு சென்றோம்.,இல்லைஇல்லை வான்நோக்கி பறந்து கொண்டிருந்தோம்.

(ஒளிக்கதிர்கள் பாயும்)
வெ.த.இராஜன்.




Comments

Popular posts from this blog

ஒளியிலே தெறிவது ,பாகம்-3

ஒளியிலே தெறிவது,பாகம்-9

ஒளியிலே தெறிவது.பாகம் -12