ஒளியிலே தெறிவது-பாகம்2
ஒளியிலே தெறிவது-2
DR.ஆதித்யா நான் பேசறது கேட்கிறதா?என்று என் மருத்துவர் DR.PALANI MS.என்னை கையை கிள்ளி கேட்டார்.
ஆம் .என் பெயர் க.ஆதித்யாMBBS.நானும் மருத்துவர்தான்.27 வயது நிரம்பிய இளம் மருத்துவர்.கேட்பது என் பேராசிரியர்.பதில் சொல்ல ஆசை .முடியவில்லை.கண்களால் சைகை காண்பித்தேன்.
ஒரு வருடத்தில் 64 அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்த சாதனையாளர் அவர்.என்னையும் காப்பாற்றிவிட துடித்தார்.
அவர் மருந்துகள் அதன் அளவுகள் பற்றி என்னை பராமரித்துக்கொள்ளும் செவிலியர் மாதவியிடம் அறிவுரை வழங்கிவிட்டு சென்றுவிட்டார்
மாதவி -வயதில் மூத்த,செவிலியர்களால் போற்றப்படும் பெருமைக்குறியவர்.என்னருகே வந்து என்னை பார்த்து கடவுளே எப்படியாவது எங்கள் மருத்துவரை காப்பாற்று என்று வேண்டிக்கொண்டு மருந்துகளை செலுத்தினார்.
கடவுள்-கடைசி உள்மனது நம்பிக்கை என்று ஒருகணம் நினைத்து கடவுளை நினைத்துக்கொண்டேன்.
யாரோ எங்கள் அறைக்குள் வருவது போன்ற சத்தம் கேட்கின்றது.மாதவியும் ஒருகணம் எழுந்து யாரன்று பார்க்க ஆவலானார்.
அந்த முகம் ஆயிரம் கோடி நட்சத்திர பிரகாசத்துடன்,என்னை நோக்கி வருவதை கண்டேன்.
ஆம் வருவது நந்தினி-என் கல்லூரி தோழி
நாங்கள் கல்லூரிப்படிப்பை முடித்து இரண்டு வருடம்தான் ஆகின்றது.என்னருகே வந்து என் கையைப்பற்றி
ஆதித்யா என்னவாயிற்று உனக்கு?இந்த உலகத்திற்காக இல்லையென்றாலும் எனக்காக எழுந்துவா!உடனே குணமாகி வா என்று மட்டும் கூறிவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிட்டாள்
எனக்கு என் உடம்பெல்லாம் நெருப்பு பூத்தது போன்ற உணர்வு.
நீங்கள் நினைப்பதுபோல் நந்தினி என் காதலியமல்ல.இது காதல் கதையுமல்ல.காதல் இல்லாமலுமில்லை.
இந்த நொடியே எழுந்து அவள் பின் செல்ல வேண்டும் என தோன்றியது.இது காதல்,காமம்,சிற்றின்பம்.பேரின்பம் கடந்த பந்தம்.
எழந்து நடக்க வேண்டிய நாள்.நாளை எழுந்து நடப்பேன்
(ஒளிக்கதிர்கள் தொடரும்)
வெ.த.இராஜன்

Comments
Post a Comment